ரன் -2 படத்தை இயக்குகிறார் லிங்குசாமி
ADDED : 1290 days ago
ஆனந்தம், ரன், சண்டக்கோழி என பல படங்களை இயக்கிய லிங்குசாமி தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது லிங்குசாமியின் சகோதரரும் திருப்பதி பிக்சர்ஸ் உரிமையாளருமான சுபாஷ் சந்திரபோஸ் சோசியல் மீடியாவில் ரன் பார்ட்- 2 விரைவில் என்று பதிவிட்டுள்ளார்.
அதனால் தி வாரியர் படத்தை அடுத்து ரன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என்று தெரியவந்துள்ளது. மேலும் 2002ம் ஆண்டு வெளியான ரன் படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த இரண்டாம் பாகத்திலும் அவர்கள் நடிக்க போகிறார்களா? இல்லை வேறு நடிகர்கள் நடிக்கிறார்களா? என்பது விரைவில் தெரியவரும்.