மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1256 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1256 days ago
வேகமாக வளர்ந்து வந்த ஹிந்தி தொலைக்காட்சி நடிகை அனகா போஸ்லே. குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் பல ஹிந்தி படங்களில் ஹீரோவின் தங்கை, ஹீரோயின் தோழியாக நடித்துள்ளார். டாடி அம்மா டாடி அம்மாமன் ஜாவோ என்ற தொலைக்காட்சி தொடரில் ஷாரதா ஜாவர் என்ற கேரக்டரில் நடித்தார். 20 வயதே ஆன அனகா போஸ்லே நடிப்பில் இருந்து விலகி ஆன்மிக பணியில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் எழுதியிருப்பதாவது: நான், சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் இருந்து நிரந்தரமாக விலகுகிறேன். மத நம்பிக்கை அடிப்படையில் ஆன்மிக வழியை பின்பற்ற இருப்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். ரசிகர்கள் அனைவரும் என் மீது காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி. எனது ஆன்மிக முடிவை மதித்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆன்மிகத்தில் ஈடுபட மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது முடிவுக்காக பலர் கவலையை பகிர்ந்தார்கள். அனைவரின் அன்புக்கும் நன்றி. என்று கூறியுள்ளார்.
1256 days ago
1256 days ago