மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1256 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1256 days ago
ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள பாரஸ்ட் ஹம்ப் படத்தை லால் சிங் சத்தா என்ற பெயரில் ரீமேக் செய்த வருகிறார் ஆமீர்கான். அவரே தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தின் புரமோசன் பணிகளை தற்போது தொடங்கி உள்ளார்.
இது தொடர்பான ஒரு நேர்காணலில் தான் நடிப்பில இருந்து ஒதுங்க முடிவு செய்திருப்பதாக கூறி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
நான் நடிக்க தொடங்கியபோது என் குடும்பம் என்னுடன் மட்டுமே இருக்கிறது என்று நினைத்தேன். அதனால் நான், அவர்களை சாதாரணமாக கருதிவிட்டேன். நான் சுயநலவாதி, என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். நான் என் குழந்தைகளுடன் இருந்தேன். ஆனால் அவர்களுடன் நேரம் செலவழிக்கவில்லை. இந்த துயரத்தை 57 வது வயதில் உணர்ந்திருக்கிறேன். 86 வயதில் உணர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.
சினிமா என்னை என் குடும்பத்திலிருந்து பிரித்துவிட்டதாக உணர்ந்தேன். நான் இனி நடிக்க மாட்டேன், திரைப்படங்களை தயாரிப்பேன் என்று எனது குடும்பத்தினரிடம் கூறினேன். நான் உங்கள் அனைவருடனும் இருக்க விரும்புகிறேன் என்று அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதிர்ச்சியானார்கள். எனது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அறிவுறுத்தினர்.
இவ்வாறு ஆமீர்கான் கூறியுள்ளார்.
1256 days ago
1256 days ago