புத்த மதத்தை பின்பற்றும் வனிதா
ADDED : 1297 days ago
1995ஆம் ஆண்டு விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் வனிதா விஜயகுமார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தவர், தனது தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார். இருந்தாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு பரபரப்பு வளையத்தில் இருந்து வந்தார்.
தற்போது அந்தகன், சிவப்பு மனிதர்கள், கொடூரன், பிக்கப் டிராப் என 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் வனிதா. தற்போது இவர் புத்த மதத்தை பின்பற்ற துவங்கி உள்ளார். மகிழ்ச்சியாக வாழ்வதற்காகவே கடந்த சில ஆண்டுகளாகவே புத்த மதத்தை பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ள அவர் இதனை மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.