மேலும் செய்திகள்
'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர்
1258 days ago
நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2'
1258 days ago
செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு
1258 days ago
சின்னத்திரை நடிகை, ஆங்கர் என பன்முக திறமை கொண்டவர் நிஷா கணேஷ். தமிழில் பல சீரியல்கள் மற்றும் சினிமாக்களில் சப்போர்டிங் ரோலில் நடித்திருந்தார். சினிமா நடிகரான கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்து கொண்ட நிஷா அதன் பின் மீடியாவுக்கு பெரிய ப்ரேக் விட்டிருந்தார். கடைசியாக 2018 ஆம் ஆண்டில் விஜய் டிவியில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், அந்த கேரக்டர் நெகட்டிவாக மாறியதால் 120 வது எபிசோடில் சீரியலை விட்டு விலகினார்.
இந்நிலையில், கடந்த 5 வருடங்களாக மீடியாவில் ஆக்டிவாக இல்லாமல் இருந்த நிஷா கணேஷ் தற்போது மீண்டும் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் என்ற தொடரில் நிஷா கணேஷ் நடிக்கவுள்ளார். இதில் அவர் கெஸ்ட் அப்பியரன்ஸாக வருகிறாரா அல்லது கேரக்டர் ரோலில் நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஏற்கனவே இந்த தொடரில் பிரபல வில்லி நடிகை பரீனா மற்றும், விஜே பப்பு ஆகியோர் என்ட்ரி கொடுத்து தற்போது முக்கிய கதாபாத்திரமாக வலம் வருகின்றனர். தற்போது நிஷா கணேஷூம் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
1258 days ago
1258 days ago
1258 days ago