‛ஜேஜிஎம்' ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் தொடும் : விஜய் தேவரகொண்டா
ADDED : 1318 days ago
நடிகர் விஜய் தேவரகொண்டா - இயக்குனர் பூரி ஜெகன்நாத் கூட்டணியில் லைகர் படம் திரைக்கு வர உள்ளது. இந்த கூட்டணி மீண்டும் ஒரு அதிரடி ஆக் ஷன் படத்திற்காக இணைந்துள்ளனர். படத்திற்கு ஜேஜிஎம் என பெயரிட்டுள்ளனர். மும்பையில் இப்படத்தின் அறிமுக விழா நடந்தது. படத்தில் ராணுவ வீரராக விஜய் தேரகொண்டா நடிக்கிறார்.
இந்த படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பூரி ஜெகன்நாத். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும், மற்றுமொரு அட்டகாசமான பொழுதுபோக்கு விருந்தாக இப்படம் இருக்கும்.
விஜய் தேவரகொண்டா கூறியதாவது.., “ஜேஜிஎம் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. இப்படம் மிகவும் சவாலான திரைக்கதை கொண்டது. இந்த கதை மிகவும் சிறப்பு வாய்ந்தது, இப்படம் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் தொடும். இயக்குநர் பூரி ஜெகன்நாத் அவர்களின் கனவுத் திரைப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். சார்மி மற்றும் அவரது குழுவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். படத்தில் எனது கதாபாத்திரம் இதுவரை நான் செய்திராத புதுமையான பாத்திரம், மேலும் இது பார்வையாளர்களிடம் ஒரு அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்'' என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2022 துவங்கி, உலகின் பல இடங்களில் நடைபெறவுள்ளது. அடுத்தாண்டு ஆக., 3ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்த படம் வெளியிடப்பட உள்ளது.