உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிரைம் திரில்லர் படமாக உருவாகி உள்ளது " முகமறியான்"

கிரைம் திரில்லர் படமாக உருவாகி உள்ளது " முகமறியான்"

புதுமுகங்கள் இணைந்து நடிக்கும் படம் முகமறியான். இதில் கிரண்குமார், திலிப் ஜெயின், ஒய்.ஜி.மகேந்திரன், காயத்திரி அய்யர், சிசர் மனோகர், விஜய் ஆனந்த், அம்பானி சங்கர், அஸ்மிதா, சூசேன், கோட்டை பெருமாள், தளபதி தினேஷ் , ரஞ்சன், சாய் கமல் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய்மோரா இயக்கி உள்ளார்.

படம் பற்றி அவர் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து வரவேற்பு பெற்ற ஊமைவிழிகள் சிவப்பு ரோஜாக்கள் போன்ற திரில்லர் பட வரிசையில் உருவாகி உள்ளது. கொரோனா காலகட்டங்களில் பல நெருக்கடிகளை சந்தித்து ஆந்திரா வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். மிகவும் பழமையான கட்டிடங்கள் , திகில் நிறைந்த பகுதிகளிலும், பல வருடங்கள் ஆட்கள் நடமாட்டமில்லாத இடங்களிலும், படப்பிடிப்பு நடத்தினோம்.

இதனால் படக்குழுவினர் நடிகர்கள் பல விபத்துகளையும், திகிலான பல அனுபவங்களையும் சந்தித்தனர். சுமார் 55 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிவடைந்துள்ளது. படம் விரைவில் வெளிவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !