உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபல நடிகை பாலியல் பலாத்கார வழக்கு : காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த முடிவு

பிரபல நடிகை பாலியல் பலாத்கார வழக்கு : காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த முடிவு

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.. இவ்வழக்கில் நடிகர் திலீப் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக திலீப் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் முடித்துவிட கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் இந்த வழக்கில் போலீசார் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளனர். விசாரண அதிகாரி கொலை திட்டத்தின் பின்னணியில் இருக்கும் ஆதாரங்களை அழிக்க திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் உதவினார் என்ற புகாரின் அடிப்படையில் அவரிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காவ்யா மாதவனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !