உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 5 மொழிகளில் உருவாகும் ‛கொட்டேஷன் கேங்'

5 மொழிகளில் உருவாகும் ‛கொட்டேஷன் கேங்'

விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 'கொட்டேஷன் கேங்'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இயக்குநர் விவேக் குமார் கூறுகையில், “எங்கள் கனவுத் திரைப்படமான 'கொட்டேஷன் கேங்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில், ஒரு குழுவாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். காஷ்மீர், சென்னை, ஐதராபாத் மற்றும் மும்பையில் படமாக்கப்பட்ட பல மொழி க்ரைம்-த்ரில்லர், திரைப்படம் தான் கொட்டேஷன் கேங் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !