மேலும் செய்திகள்
டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'
1279 days ago
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1279 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1279 days ago
கேரளாவை சேர்ந்தவர் தான் என்றாலும் நடிகை நிவேதா தாமஸ் முழுக்க முழுக்க தனது கவனத்தை செலுத்தி வருவது எல்லாம் தெலுங்கு திரையுலகில் தான். கடந்த எட்டு வருடங்களை கணக்கில் எடுத்து பார்த்தால், தமிழில் பாபநாசம் மற்றும் தர்பார் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதேபோல 2014ல் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான மணிரத்னம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் தற்போது மலையாளத்தில் எந்தாடா ஷாஜி என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நிவேதா தாமஸ். இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா என இரண்டு கதாநாயகர்கள் நடிக்கின்றனர். காட்பை பாபு என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோக்கள் இருவருடன் நிவேதா தாமசுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.
1279 days ago
1279 days ago
1279 days ago