ஜீ 5 தளத்தில் வெளியாகும் அனந்தம் வெப் சீரிஸ்
ADDED : 1328 days ago
பிரகாஷ்ராஜிடம் உதவியாளராக இருந்து இயக்குனர் ஆனவர் வி.பிரியா. கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா படங்களை இயக்கினார். இப்போது அவர் இயக்கி இருக்கும் வெப் சீரீஸ் அனந்தம். இதில் பிரகாஷ்ராஜ், அரவிந்த் சுந்தர், இந்திரஜா, சம்பத், ஜான் விஜய் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். 1951ம் ஆண்டில் கட்டப்பட்ட அனந்தம் என்ற வீட்டில் வாழும் 3 தலைமுறைகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட செண்டிமென்ட் கதை. இதில் முதல் தலைமுறை குடும்பத் தலைவனாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். இந்த தொடர் வருகிற 22ம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.