சிறந்த பின்னணி இசை: இளையராஜாவின் ஆங்கில படத்துக்கு விருது
ADDED : 1396 days ago
இசை அமைப்பாளர் இளையராஜா ஏ பியூட்டிபுல் பிரேக் அப் என்ற ஆங்கில படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். இங்கிலாந்தை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான எஸ். நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இப்படத்தில் அறிமுக நடிகர்களான க்ரிஷ் மற்றும் மட்டில்டா ஆகியோர் நாயகனாக நடித்துள்ளனர். அஜித்வாசன் உக்கினா இயக்கி உள்ளார், கே.குணசேகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டது. இந்த படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு விருது வழங்கப்பட்டது.