டைட்டானிக் காதலும் கவுந்து போகும் மே 6ல் ரிலீஸ்
ADDED : 1280 days ago
கலையரசன் நடிப்பில் குதிரைவால் என்ற படம் சமீபத்தில் வெளியானது. அதையடுத்து நட்சத்திரம் நகர்கிறது, டைட்டானிக் காதலும் கவுந்து போகும் போன்ற படங்கள் அவர் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதில் டைட்டானிக் காதலும் கவுந்து போகும் என்ற படம் மே 6-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜானகிராமன் இயக்கியுள்ள இந்த படத்தை சிவி. குமார் தயாரித்துள்ளார். கலையரசனுடன் கயல் ஆனந்தி, காயத்ரி, மதுமிதா, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே .பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படம் திரைக்கு வரும் அதே மே 6-ஆம் தேதி ஆர்கே. சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.