ஹேக்கானது - ரசிகர்களுக்கு யாமி கவுதம் வேண்டுகோள்
ADDED : 1282 days ago
தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், கெளரவம் ஆகிய படங்களில் நடித்தவர் யாமி கவுதம். தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்தாண்டு திருமணம் செய்த இவர் தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் யாமி எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். இந்நிலையில் இவரின் இன்ஸ்டா கணக்கு ஹேக்காகி உள்ளது.
இதுப்பற்றி யாமி கூறுகையில், ‛‛எனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது போல் தெரிகிறது. எனது பக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய பதிவுகள் எதேனும் வந்தால் அதனை தவிர்த்து விடுங்கள். விரைவில் இதை சரி செய்யும் பணிகள் நடக்கின்றன'' என தெரிவித்துள்ளார்.