உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலிவுட் மேனேஜரை நியமித்த சமந்தா

பாலிவுட் மேனேஜரை நியமித்த சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த சமந்தா. தமிழை விட தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தார். தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவைக் காதலித்து கரம் பிடித்து பின்னர் பிரிந்தார்.

இதுநாள் வரையிலும் சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் தெலுங்கில் ஒரே மேனேஜரே அவர்களது திரைப்படம் சம்பந்தப்பட்ட பணிகளைக் கவனித்து வந்தார். பிரிவுக்குப் பின் அந்த மேனேஜர் நாகசைதன்யாவுக்கு ஆதரவாகச் சென்றதால் தற்போது அந்த மேனேஜரை சமந்தா மாற்றிவிட்டாராம்.

ஹிந்தியிலும் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக பாலிவுட்டைச் சேர்ந்த ஒருவரை புதிய மேனேஜராக நியமித்துள்ளாராம். அவரிடமே தெலுங்குப் படங்களுக்கான பணிகளையும் ஒப்படைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

சமந்தா தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !