இரண்டு மெகா ஹீரோக்களை இயக்கப் போகும் ஏ.ஆர்.முருகதாஸ்
ADDED : 1313 days ago
விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற படங்களை இயக்கியவர் ஏ. ஆர். முருகதாஸ். மீண்டும் விஜய் 65ஆவது படத்தை இயக்க இருந்தார். ஆனால் கதை விவகாரத்தில் பிரச்சினை காரணமாக அந்த படத்திலிருந்து முருகதாஸ் விலகி விட்டார். அதன் காரணமாகவே விஜய்யின் 65வது படத்தை நெல்சன் திலிப்குமர் இயக்கி உள்ளார். அதன் பிறகு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு அனிமேஷன் படத்தை முருகதாஸ் இயக்கி வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அடுத்தபடியாக விக்ரம் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவருக்கும் முருகதாஸ் கதை சொல்லி ஓகே பண்ணி விட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. ஆக்ஷன் கதைகளில் உருவாகும் இந்த படங்களை அடுத்து, அடுத்து இயக்கப் போகும் முருகதாஸ் விக்ரம் நடிக்கும் படத்தை முதலில் இயக்குவார் என்றும், அதன்பின் விஜய் சேதுபதி படத்தை இயக்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.