அல்லு அர்ஜுனுடன் நடிக்க விரும்பும் ஷாகித் கபூர்
ADDED : 1282 days ago
2019ம் ஆண்டு நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ஜெர்சி. நானி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்தார். இப்படத்தை இயக்கிய கவுதம் தின்னனூர் என்பவர் ஹிந்தியில் ஷாகித் கபூரை வைத்து தற்போது ஜெர்சி படத்தை ரீமேக் செய்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மிருணாளி தாகூர் நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
ஹிந்தியிலும் ஜெர்சி என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாகித் கபூர், தென்னிந்திய நடிகர்களில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து தான் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதோடு புஷ்பா படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்ரீ வள்ளி பாடலில் அல்லு அர்ஜுனின் நடனம் மிக சிறப்பாக இருந்தது. அதுபோன்று தானும் ஒரு படத்தில் நடனமாட இருப்பதாகவும் ஷாகித் கபூர் தெரிவித்திருக்கிறார்.