கேங்ஸ்டர் கதையில் நடிக்கும் அஜித்
ADDED : 1279 days ago
வலிமை படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கும் தனது 61வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் அஜித் குமார். இந்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கும் அஜித், அதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க போவதாக தகவல் வெளியானது. ஆனபோதும் அது இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே உள்ளது.
இந்த நிலையில் 8 தோட்டாக்கள் என்ற படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் என்பவர் அஜித்தை வைத்து ஒரு கேங்ஸ்டர் கதையை படமாக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மதுரை கிராமத்து பின்னணி கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் அஜித் குமார் தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.