ஹீரோவானார் ஹரி கிருஷ்ணன் : முதல் படத்திலேயே இரண்டு ஜோடி
ADDED : 1281 days ago
அட்டக்கத்தி படத்தில் அறிமுகமானவர் ஹரி கிருஷ்ணன். அதன் பிறகு மெட்ராஸ், கபாலி, யாக்கை, இவன் தந்திரன், அண்ணனுக்கு ஜே, பரியேறும் பெருமாள், வடசென்னை, சண்டக்கோழி 2, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, தேவதாஸ் பிரதர்ஸ், விநோதய சித்தம், ரைட்டர் படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தார்.
இந்த நிலையில் அண்ணபூர்ணி என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார். முதல் படத்திலேயே லிஜோமோள் ஜோஸ், லாஸ்லியா என இரண்டு ஹீரோயின்களுடன் நடிக்கிறார். இந்த படத்தை ரிபி பிக்சர்ஸ் சார்பாக ஹரி பாஸ்கர் தயாரிக்கிறார். லயோனல் ஜோசுவா இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஹெக்டர் ஒளிப்பதிவு செய்கிறார். த்ரில்லர் ஜார்னரில் படம் தயாராகிறது.