மே மாதம் ரிலீஸாகும் சுந்தர் சி - ஜெய்யின் பட்டாம்பூச்சி
ADDED : 1360 days ago
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை இணைத்து ஒரு படம் இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இந்த படத்தில் அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். அதேசமயம் பத்ரி நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார் சுந்தர். சி. இப்படத்தில் வில்லனாக ஜெய் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். அந்த போஸ்டரில், இந்த படத்திற்கு பட்டாம்பூச்சி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பதோடு இப்படம் மே மாதம் ரிலீசாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.