தனுஷிற்கு கர்ணன் உருவச்சிலையை பரிசளித்த தயாரிப்பாளர், இயக்குனர்
ADDED : 1276 days ago
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் 9ம் தேதி வெளியான கர்ணன் திரைப்படம் ஒரு வருடத்தை நிறைவு செய்தது. இது சம்மந்தமாக தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் தயாரிப்பாளர் எஸ்.தாணு , இயக்குனர் மாரி செல்வராஜ் தனுஷுற்கு கர்ணன் உருவச்சிலையை நினைவு பரிசாக வழங்கி உள்ளார்கள். இந்த உருவச்சிலையை வழங்க இருவரும் ஊட்டிக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.