நானே வருவேன் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகை எல்லி அவ்ராம்!
ADDED : 1386 days ago
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை இந்துஜா உடன் முக்கிய கதாபாத்திரங்களில் செல்வராகவன், யோகிபாபு, இந்துஜா, ஸ்வீடிஷ் நாட்டை சேர்ந்த நடிகை எல்லி அவ்ராம், பிரபு ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகை எல்லி அவ்ராம் தனக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தனுஷ், செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.