தமிழில் தயாரிக்க பயந்த மலையாள படம் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
ADDED : 1274 days ago
பகத் பாசில் நடித்து மலையாளத்தில் வெளியான படம் டிரான்ஸ். போலி மத போதகர்களின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட படம். பஹத் பாசில், நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன், திலீஷ் போத்தன், செம்பியான் வினோத், விநாயகன் உட்பட பலர் நடித்திருந்தார்கள், அன்வர் ரஷீத் தயாரித்து இயக்கி இருந்தார்.
மதத்தின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடும் போலி கும்பலின் கதை.
இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய சிலர் முயற்சித்தார்கள். ஆனால் எந்த நடிகரும் நடிக்க முன் வராததால் அந்த முயற்சி கைகூடவில்லை. இந்த நிலையில் இந்தப் படம் தமிழில் 'நிலை மறந்தவன்'என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது.