தெலுங்கில் இருந்து தமிழுக்கு வரும் அனன்யா நாகல்லா
ADDED : 1274 days ago
தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகை அனன்யா நாகல்லா. மெல்லீஷம் படத்தில் அறிமுகமாகி பிளேபேக், வக்கீல் ஷாப், மேஸ்ட்ரோ படங்களில் நடித்தார். தற்போது சாகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். அஞ்சல படத்தை இயக்கிய தங்கம் பா. சரவணன் இயக்குகிறார். எஸ்கேஎல்எஸ் கேலக்ஸி மால் புரொடக்ஷன்ஸ் சார்பில் இ.மோகன் தயாரிக்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். ராமி ஒளிப்பதிவு செய்கிறார். சசிகுமார், அனன்யா நகல்லாவுடன், கருணாஸ், ரம்யா நம்பீசன், விக்னேஷ், 'அகண்டா' நிதின் மேத்தா, பாகுபலி பிராபகர், உட்பட பலர் நடிக்கின்றனர். இது தென்னிந்தியா முழுக்க பயணிக்கும் ஒரு டிராவல் கதை.