அதிரடி சாகச கதையில் அஜித் 61
ADDED : 1274 days ago
அஜித், வினோத், போனிகபூர் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து தற்போது அஜித்தின் 61வது படமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஒரு மாத காலம் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் பூஜையின்போது எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார் போனி கபூர். அஜித் 61 படம் துவங்கியது. அஜித்தின் மற்றுமொரு ஆக் ஷன் சாகசம் உருவாகிறது என தெரிவித்துள்ளார். அதேசமயம் அந்த போட்டோவில் வினோத், போனி கபூர், நீரவ் ஷா உள்ளிட்டோர் உள்ள நிலையில் அஜித் இடம் பெறவில்லை.