முதன்முதலாக தெலுங்கில் டப்பிங் பேசிய நதியா
ADDED : 1304 days ago
1984ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற படத்தில் அறிமுகமான நதியா, அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பரவலாக நடித்து வந்தார். ரஜினியுடன் ராஜாதி ராஜா படத்தில் நடித்த பிறகு திருமணம் செய்து கொண்ட நதியா, திருமணத்திற்கு பிறகும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நானி, நஸ்ரியா இணைந்து நடித்துள்ள அன்டே சுந்தராநானிகி என்ற படத்தில் நதியாவும் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார். முதன்முதலாக இந்த படத்திற்காக தெலுங்கில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசி இருக்கிறார். இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ள நதியா, நான் டப்பிங் பேசுவதற்கு ஊக்கமளித்த இயக்குனர் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.