ரன்பீர் - ஆலியா பட் திருமண வைபவம் நாளை முதல் ஆரம்பம்
ADDED : 1388 days ago
பாலிவுட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர், நாயகியரில் ஒருவரான ஆலியா பட் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார்கள். இவர்களது திருமணம் ஏப்., 15 அன்று மும்பையில் நடைபெற உள்ளது. இரு வீட்டாரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளார்களாம்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மட்டும் பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் பாலிவுட்டின் பிரபலங்கள் பலரும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. திருமணத்திற்கு முந்தைய சில நிகழ்வுகளான சங்கீத் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாளை(ஏப்., 13) முதல் துவங்க உள்ளது.
ஆலியா பட் சமீபத்தில்தான் தெலுங்கில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடத்திலும் அறிமுகமானார்.