புடவையில் ஆளை மயக்கும் டிடி
ADDED : 1289 days ago
தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தற்போது சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அதேசமயம் மிகவும் முக்கியமான ஷோக்களையும் விஜய் டிவிக்காக தொகுத்து வழங்கி வருகிறார். ஒருபுறம் ஷூட்டிங், ஈவெண்ட்ஸ் என பிசியாக இருந்தாலும், சமூகவலைதளத்தில் ஆக்டிவாக போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் புடவையில் சில க்யூட்டான புகைப்படங்களை டிடி வெளியிட்டிருந்தார். ரசிகர்கள் அதைபார்த்துவிட்டு 'அடோரபிள் அழகியே, புடவை கட்டிய ஓவியமே' என கவிதை எழுதியுள்ளனர்.