வெற்றிமாறன் திரை ஆய்வகத்திற்கு தாணு ஒரு கோடி நிதி உதவி
ADDED : 1270 days ago
இயக்குனர் வெற்றிமாறன் தனது நாம் அறக்கட்டளையின் சார்பில் திரை பண்பாட்டு மையம் என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறார். திரைத்துறையில் ஆர்வம் உள்ள ஏழைகளுக்கு உணவு, தங்குமிட வசதியோடு இலவச திரை பண்பாட்டு பயிற்சி அளிப்பதற்காக இந்த அமைப்பை தொடங்கி உள்ளார்.
இந்நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சியின் போது கலைப்புலி S தாணு அவர்கள் முதல் நபராக ஒரு கோடி ரூபாய் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்திரவேல் அவர்களிடம் கொடுத்து , இந்நிறுவனத்தில் படிக்கும் மாணவர் மாணவிகளுக்கு வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவர்களுக்கு தனது தயாரிப்பு நிறுவனத்தில் படத்தை இயக்கும் வாய்ப்பு தரப்படும் என்று அறிவித்துள்ளார் ..