6 ஆண்டுகளுக்கு பின் புதிய லுக்கிற்கு மாறிய யஷ்
ADDED : 1271 days ago
2018 பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படத்தில் அடுத்து பிரபலமானவர் கன்னட நடிகர் யாஷ். அதையடுத்து மீண்டும் தற்போது கேஜிஎப்- 2 படத்தில் நடித்திருக்கிறார். இந்த படமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக தனது புதிய படத்துக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் யஷ். அந்தவகையில் அடுத்து நடிக்கும் படத்துக்காக தனது நீண்ட தாடி, தலைமுடியை ட்ரீம் செய்து ஸ்மார்ட்டாக மாறி இருக்கிறார். அந்த வகையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய அளவில் வளர்த்து வைத்திருந்த தன் தலை முடி, தாடியை குறைத்து புதிய கெட்டப்புக்கு மாறி உள்ளார்.