நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற மாதவனின் மகன்
ADDED : 1271 days ago
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரர் என்பது தெரிந்ததே. பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது கோபன்ஹேகன் என்ற இடத்தில் நடந்த டேனிஷ் ஓப்பன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் சாஜன் பிரகாஷ் மற்றும் வேதாந்த் இருவர் கலந்து கொண்டார்கள். இவர்களில் சாஜன் பிரகாசுக்கு தங்கப்பதக்கமும், நடிகர் மாதவனின் மகனான வேதாந்தத்திற்கு வெள்ளிப்பதக்கமும் கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவலை நடிகர் மாதவன் சமூகவலைதளத்தில் பதிவிட்டு தனது மகனின் வெற்றியை மகிழ்ச்சி உடன் பகிர்ந்துள்ளார்.