ஹிந்தியில் 250 கோடி வசூல் கடந்த 'ஆர்ஆர்ஆர்'
ADDED : 1269 days ago
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. தெலுங்கில் தயாரான இப்படம் ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது.
முதல் நாள் வசூலில் சாதனை படைத்தது மட்டுமல்லாமல் மூன்றே நாட்களில் 500 கோடி அதன் பிறகு 1000 கோடி வசூல் என தொடர் சாதனை படைத்தது. மற்றொரு சாதனையாக ஹிந்தியில் தற்போது 250 கோடி வசூலை இந்தப் படம் கடந்துள்ளது.
இந்த 2022ம் ஆண்டில் இதுவரை வெளிவந்த நேரடி ஹிந்திப் படங்கள் செய்யாத வசூல் சாதனையை 'ஆர்ஆர்ஆர்' செய்துள்ளது. இந்த ஆண்டில் அதிக வசூலைப் பெற்று முதலிடத்தில் இருக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்' தான். இந்த சாதனையை அடுத்த வாரத்தில் 'கேஜிஎப் 2' படம் முறியடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.