கலெக்டராக விரும்பும் ‛களவாணி' பட நடிகை
ADDED : 1315 days ago
விமல் நடித்த களவாணி படத்தில் அவரது தங்கையாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. அதன்பின் சில படங்களில் நடித்தவர், டிவி சீரியலிலும் நடித்தார். இவர் கூறுகையில், ‛‛தந்தை பிரிந்து சென்ற நிலையில் தாயின் அரவணைப்பில் வளர்கிறேன். சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். கலெக்டராக ஆகும் ஆசை உள்ளது. இதற்காக டில்லி சென்று பயிற்சி மேற்கொள்ள உள்ளேன். நடனம் சொல்லிக் கொடுத்து அதில் வரும் வருமானத்தில் தான் படித்து வருகிறேன். படிப்பில் எந்தளவுக்கு ஆர்வம் உள்ளதோ அதே அளவுக்கு சினிமா ஆசையும் உள்ளது. விஜய் உடன் நடிக்க ஆசை'' என்றார்.