அயலான் பற்றி இஷா கோபிகர் வெளியிட்ட தகவல்
ADDED : 1400 days ago
சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள படம் அயலான். ஏ.ஆர் .ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை ரவிக்குமார் இயக்கி இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதோடு, இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இஷா கோபிகர் தான் அளித்த ஒரு பேட்டியில் அயலான் படம் சயின்ஸ் பிக்சன் மற்றும் கிராபிக்ஸ் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் உருவாகும் முதல் ஏலியன் திரைப்படம் இது என்றும் தெரிவித்திருக்கிறார்.