மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1236 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1236 days ago
நேர்கொண்ட பார்வை படத்தை எடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் வலிமை. போனி கபூர் தயாரித்த இந்தப் படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரைக்கு வந்தது. தமிழ் ,தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி, கார்த்திகேயா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்தப்படத்தில் அஜித் நடித்த ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பைக் ரேஸ் காட்சிகள் அவரது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதையடுத்து திரைக்கு வந்து ஒரு மாதத்தில் ஓடிடி தளத்திலும் வலிமை வெளியானது. டிஜிட்டல் தளத்தில் வலிமை மிகப்பெரிய சாதனை செய்ததாக தொடர்ந்து போனிகபூர் செய்தி வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வலிமை படம் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1236 days ago
1236 days ago