மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1236 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1236 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1236 days ago
தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினி. அதன் பிறகு கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே தோல்வி அடைந்து விட்டன. கடந்த 7 ஆண்டுகளாக படங்கள் இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா ரஜினி, தற்போது மீண்டும் முழுவீச்சில் படங்கள் இயக்குவதில் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் பயணி என்ற வீடியோ ஆல்பத்தை இயக்கி வெளியிட்டார். அடுத்து அவர் விரைவில் பாலிவுட்டில் ஒரு படம் இயக்க போகிறார்.
இதுபற்றி ஐஸ்வர்யா கூறுகையில், வை ராஜா வை படம் திரைக்கு வந்த நேரத்தில் ஹிந்தியில் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் எனது மகன்கள் சிறுவர்களாக இருந்ததால் அப்போது படம் இயக்குவதில் கவனம் செலுத்த முடியவில்லை. தற்போது ஒரு படத்தை இயக்குகிறேன் என்றவர், ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், ரன்வீர்சிங் போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்க தான் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
1236 days ago
1236 days ago
1236 days ago