தாதா சாகேப் பால்கே விருது விழாவில் தேர்வான நடுவன்
ADDED : 1347 days ago
இயக்குனர் ஷாரங் இயக்கத்தில் பரத் நடித்து வெளியான படம் 'நடுவன்'. லக்கி சாஜர் தயாரித்திருந்தார். அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த், யோக் ஜெய்பீ, ஜார்ஜ், பாலா மற்றும் தசரதி குரு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தரண் குமார் இசையமைத்திருந்தார். வித்தியாசமான கதைகளத்தில் ஓடிடியில் வெளியான இந்த படம் தற்போது டில்லியில் நடக்கும் 12 வது தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழா 2022 -ல் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.