கீர்த்தி பாண்டியனின் ‛கொஞ்சம் பேசினால் என்ன'
ADDED : 1286 days ago
நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், தும்பா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு அப்பா அருண் பாண்டியனுடன் அன்பிற்கினியாள் படத்தில் நடித்தார். தற்போது அவர் கண்ணகி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர அவர் புதிதாக நடிக்கும் படத்திற்கு 'கொஞ்சம் பேசினால் என்ன ' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை கிரி மர்ப்பி என்பவர் இயக்குகிறார். வினோத் கிஷன் நாயகனாக நடிக்கிறார். சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கிறார். தீபன் சக்ரவர்த்தி இசை அமைக்கிறார். லெனின் ஒளிப்பதிவு செய்கிறார். இது நாயகிக்கு முக்கியத்தும் கொடுத்து உருவாகும் படம்.