மலையாள தயாரிப்பாளர் ஜான் பால் காலமானார்
ADDED : 1260 days ago
மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமாகிய ஜான் பால் (வயது 71), கடந்த இரு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஜான் பாலின் நண்பர் இவரது சிகிச்சைக்கு உதவுமாறு சமூக வலைதளங்களில் கோரியிருந்தார். இதனையடுத்து இவரது சிகிச்சைக்காக கேரள அரசு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் ஒதுக்கியது. இந்நிலையில், கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ஜான் பால், நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.