உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சித்தார்த் மல்ஹோத்ரா- கியாரா அத்வானி பிரேக்அப்?

சித்தார்த் மல்ஹோத்ரா- கியாரா அத்வானி பிரேக்அப்?

தற்போது ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. வினய வித்யா ராம் என்ற படத்தில் ஏற்கனவே ராம்சரணுடன் நடித்துள்ள கியாரா அத்வானிக்கு அவருடன் இது இரண்டாவது படமாகும். சமீபத்தில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்த கியாரா அத்வானி குறித்து பாலிவுட்டில் தற்போது ஒரு பரபரப்பு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.

அதாவது பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் காதலித்து வந்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரேக் அப் ஆகி இருப்பதாக பாலிவுட் மீடியாக்களில் பரபரப்பு செய்தி வெளியாகி வருகிறது. ஆனபோதிலும் இதுகுறித்து அவர்கள் இருவரும் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அவர்களை தொடர்பு கொண்ட மீடியாக்களின் அழைப்பையும் ஏற்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !