உலக பாக்ஸ் ஆபீஸ் : 5வது இடத்தில் 'கேஜிஎப் 2'
ADDED : 1303 days ago
கன்னடத் திரையுலகத்தை இந்திய சினிமா வரைபடத்தில் மட்டுமல்லாது உலக சினிமா வரைபடத்திலும் இடம் பெறச் செய்துவிட்டது 'கேஜிஎப் 2'. ஏப்ரல் 14ம் தேதி வெளியான இந்தப் படம் ஏப்ரல் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலான உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 70 மில்லியன் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 500 கோடி வசூலித்து 2ம் இடத்தைப் பிடித்தது.
அடுத்து, ஏப்ரல் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 19 மில்லியன் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 142 கோடி வசூலித்து 5ம் இடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டு வாரங்களிலும் இப்படம் உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் கடந்த 11 நாட்களில் கேஜிஎப் 2 படம் 850 கோடி வசூலைக் கடந்துள்ளது.