ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது
ADDED : 1 minutes ago
2011ம் ஆண்டில் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் என்ற படத்தில் அவரது மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சாரா அர்ஜுன். அதன்பிறகு சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது 20 வயதை அடைந்துள்ள சாரா அர்ஜுன், ஹிந்தியில் ரன்வீர் சிங் நாயகனாக நடித்திருக்கும் துரந்தர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தை ஆதித்யா தார் என்பவர் இயக்கி உள்ளார். மாதவன், அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இன்று இந்த துரந்தர் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. அதிரடியான அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த படத்தில் ரத்தம் தெறிக்கும் பல காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.