ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி
ADDED : 8 minutes ago
அருணாச்சலம் படத்தை அடுத்து மீண்டும் ரஜினி நடிப்பில் அவரது 173 வது படத்தை இயக்க கமிட்டாகி இருந்தார் சுந்தர்.சி. ஆனால் கதை விஷயத்தில் உடன்பாடு ஏற்படாததால் அந்த படத்திலிருந்து விலகிவிட்டார். அதேசமயம் மூக்குத்தி அம்மன் 2 படத்தை அடுத்து கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க கதை சொல்லி இருந்தார் சுந்தர்.சி. ஆனால் எதிர்பாராதவிதமாக ரஜினி படம் வந்ததால் கார்த்தி படத்தை கிடைப்பில் போட்டுவிட்டு ரஜினிக்காக ஸ்கிரிப்ட் பண்ண தொடங்கினார். ஆனால் இப்போது அந்த படம் இல்லை என்று ஆனதும் மீண்டும் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார் சுந்தர்.சி . அவரை தொடர்ந்து விஷால் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்கப் போகிறார்.