தி கிரே மேன்- தனுஷின் மாஸ் புகைப்படம் வெளியானது
ADDED : 1259 days ago
தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். இந்நிலையில், ஏற்கனவே அவர் ஹாலிவுட்டில் நடித்துள்ள உள்ள தி கிரே மேன் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிப்பட்டுள்ளன. அதில் தனுஷின் போஸ்டர் இடம்பெறவில்லை என்றபோதும் ஒரு காரின் மீது தனுஷ் ஸ்டைலாக நின்றபடி போஸ் கொடுக்கும் ஒரு மாஸான புகைப்படமும் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தனுஷின் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். அதோடு அடுத்தபடியாக தனுசின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தபடம் வருகிற ஜூலை 22ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.