ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீச்சு : 2 பேர் கைது
ADDED : 1259 days ago
இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் பல திறமைகளை கொண்டவரான ஹிப்ஹாப் தமிழா ஆதி, ‛ஆம்பள' என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அதன்பிறகு இயக்குனர், ஹீரோ என்றும் பயணித்து வருகிறார். இவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளார்கள். இதையடுத்து ஆதி காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து சிசிடிவி கேமரா மூலம் அந்த மர்ம நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆக்டிங் டிரைவர்கள் என்றும், குடி போதையில் இருந்த போது இந்த கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.