சர்காரு வாரி பாட்டா: தமிழிலும் வெளியாகும் மகேஷ் பாபு படம்
ADDED : 1256 days ago
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள படம் சர்காரு வாரி பாட்டா. கீர்த்தி சுரேஷ் ஹீரோயின். கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் இயக்கி உள்ளார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். மகேஷ் பாபு தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற மே 12ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர்களான பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் போன்றோர் தமிழில் ஒரு வியாபார மார்கெட்டை உருவாக்கி இருப்பதை போன்று மகேஷ் பாபுவும் அந்த முயற்சியில் இறங்கி உள்ளார். அதனால் சர்காரு வாரி பாட்டாவை தமிழில் டப் செய்து வெளியிட இருக்கிறார். இதற்கு முன்னர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் திரைப்படம் தமிழில் வெளியானது. ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.