உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வறுமையில் வாடும் தனது தயாரிப்பாளருக்கு மோட்டார் சைக்கிள் பரிசளித்த சிவகுமார்

வறுமையில் வாடும் தனது தயாரிப்பாளருக்கு மோட்டார் சைக்கிள் பரிசளித்த சிவகுமார்

நடிகர் சிவகுமாரின் திரைப் பயணத்தின் ஆரம்ப காலத்தில் அவரை கதாநாயகனாக போட்டு 1983 மற்றும் 1986ம் ஆண்டுகளில் 2 படங்களை தயாரித்தவர் சூலூர் கலைப்பித்தன். தற்போது சொந்த ஊரான சூலூரில் சாதாராண ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். முதியோர் பென்சன் மட்டுமே அவருக்கு வருமானம். வெளியூர்களுக்கு டவுன் பஸ்சிலேயே சென்று வருகிறார். அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற கவிஞர் செந்தலை நா.கவுதமனுக்கும் சிவகுமார் மோட்டார் சைக்கிளை பரிசாக அளித்தார். சூலுரில் நடந்த எளிய விழா ஒன்றில் இதனை அவர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !