என் மீது விழுந்த இமேஜ் மாறும் - சாமி
ADDED : 1277 days ago
உயிர், சிந்து சமவெளி போன்ற சர்ச்சை படங்களை இயக்கியவர் சாமி. தற்போது ஈரானிய படமான சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தை தமிழில் அக்கா குருவி என்ற பெயரில் ரீ-மேக் செய்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். சாமி கூறுகையில், ‛‛இந்த படம் வந்த பிறகு என் மீது விழுந்த தவறான இமேஜ் மாறும். எப்போதும் சிறந்த கதைகளையே எடுக்க முன் வந்தேன். ஆனால் பெரும்பாலானவர்கள் சர்ச்சைக்குரிய படத்தை எடுக்கும் நிலையை உருவாக்கிவிட்டனர். 150 கதைகள் வைத்துள்ளேன். இனி வருடத்திற்கு 2, 3 படங்கள் எடுக்க திட்டமிட்டுள்ளேன். இந்த படத்தில் 80களில் இளையராஜா இசையில் வெளிவந்த 15 பாடல்களை, காட்சியின் சூழலுக்கு தகுந்தாறு போல் இணைத்துள்ளோம். படத்தை பார்த்த பின்பு தான் இளையராஜா இசையமைக்க சம்மதித்தார்'' என்றார்.