‛காத்துவாக்குல ரெண்டு காதல்' கிடைத்த வரவேற்பு.. நன்றி தெரிவித்த சமந்தா
ADDED : 1298 days ago
காதல் மற்றும் காமெடி கதைக்களத்தில் உருவாகி வெளியான ‛காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் ரசிகர்களிடையே நல்ல நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு நடிகை சமந்தா நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் .அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. அனைவரும் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளனர். நீங்கள் கொடுத்த வரவேற்பு, மெசேஜ், ட்வீட், வாழ்த்துக்கள் என அனைத்திற்கும் நன்றி என்று சமந்தா தெரிவித்துள்ளார்.