அதர்வாவின் 'நிறங்கள் மூன்று' படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1488 days ago
நடிகர் அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம், அட்ரஸ், ட்ரிக்கர், ஒத்தைக்கு ஒத்த ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. இந்த நிலையில் துருவங்கள் பதினாறு, மாபியா, மாறன் படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'நிறங்கள் மூன்று' என்னும் படத்தில் நடித்து வந்தார்.
இந்த படத்தில் அதர்வாவுடன் சரத்குமார், ரஹ்மான் ஆகியோரும் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.